
’தென் மேற்கு பருவக்காற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி டைரக்ட் செய்து வரும் புதிய படம் ‘நீர்ப்பறவை’.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வரும் இந்த படத்தில் ’வெண்ணிலா கபடி குழு’ விஷ்ணு ஹீரோவாகவும், சுனேனா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், நந்திதா தஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதில் நந்திதா தாஸ் நடித்த கேரக்டரில் முதலில் ஷபானா ஆஸ்மியைத்தான் டைரக்டர் சீனு ராமசாமி நடிக்க வைக்க முடிவு செய்திருந்தாராம். அதன்படி அவரைத் தொடர்பு கொண்டு நடிக்க கேட்ட போது எனக்கு தெரியாத மொழிப்படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டாராம்.
எனக்கு ஹிந்தியும் ஆங்கிலம் மட்டும் தான் தெரியும். மொழி தெரியாத படங்களில் நான் எப்போதுமே நடிப்பதில்லை. அதனால் நீங்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம். வேறு யாராவது நல்ல நடிகையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டாராம் ஷபானா ஆஸ்மி.
எந்த மொழியாக இருந்தாலும் சரி, ப்ராம்டிங் என்ற பெயரில் abcd efgh என உதட்டசைத்து விட்டு காசை வாங்கிக்கொண்டு போகும் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு நடிகை என ஷபானாவின் மன உறுதியை நினைத்து மெய் சிலிர்த்தாராம் சீனு ராமசாமி.
No comments:
Post a Comment