நேற்றே தீர்ப்பு சாதகமா வந்திருந்தா வர்ர ஆறாம் தேதி சென்னைல ஆடியோ ரிலீஸை அமர்க்களமா நடத்தத் திட்டமிட்டிருந்தாங்க. அதுக்கு எல்லா விதத்திலும் தன் இசைக்குழுவைத் தயாரா வச்சிருந்தாரு படத்தோட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
டைட்டில் பிரச்சினை தீர்ந்த மறுநிமிஷம் படத்தோட பாடல் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் ஆவலோடவே எதிர்பார்க்கலாம். அதைத் தொடர்ந்து படத்தோட பிரமோஷன்களை ‘ஃபுல் ஸ்விங்’ல நடத்தத் திட்டமிட்டிருக்கார் பிரமாண்ட விளம்பரத்திலும் புலியான தயாரிப்பாளர் ‘கலைப்புலி எஸ்.தாணு’.
சாதகமான தீர்ப்பு வரும்வரை ரசிகர்கள் தங்கள் ஆவலைக் கட்டுப்படுத்தி படத்தோட வெற்றிக்கு உறுதுணை தரணும்னு கேட்டுக்கிட்டிருக்கார் படத்தோட டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். கடைசி கற்கண்டு செய்தியா மும்பைல நடக்கிற ஆக்ஷன் திரில்லரான ‘துப்பாக்கி’ இங்கே வெளியான கையோட இந்தியிலும் ரீமக் பண்ண ப்ளான் போய்க்கிட்டிருக்காம்.
தீபாவளிக்கு ‘துப்பாக்கி’ ரிலீசைத் தள்ளி வச்சதுல, விஜய் ரசிகர்களுக்கு இது ‘ரெட்டை தீபாவளியா’ அமையப்போகுது.
No comments:
Post a Comment