காதலில் விழுந்த காஜல் அகர்வால்
மகேஷ்பாபு – காஜல் அகர்வால் நடிப்பில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் வந்த, “பிசினஸ்மேன் என்ற திரைப்படம், லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துக்காக, ஏ.எல்.பாலாஜி தயாரிப்பில் தற்போது, அதே பெயரிலேயே தமிழ் பேச தயாராகிறது. இதற்கான தமிழ் வசனத்தை, கண்ணன் எழுதி உள்ளார். மகேஷ்பாபு-காஜல் அகர்வால் தவிர, பிரகாஷ்ராஜ், நாசர், சாயாஜி ஷிண்டே போன்ற, தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த முகங்கள் பலரும், படத்தில் உள்ளனர். படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகளில், நிஜ காதலர்களைப் போல, மகேஷ் பாபுவும், காஜல் அகர்வாலும், மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். அதனால், உண்மையாகவே மகேஷ்பாபுவின் காதல் வலையில் காஜல் அகர்வால் விழுந்துவிட்டாரோ? என, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
No comments:
Post a Comment