விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள பீட்சா திரைப்படம் வரும் 19ம் திகதி உலகமெங்கும் திரையிடப்படுகின்றது.
பீட்சா காதல் மற்றும் திகில் நிறைந்த திரைப்படமாக கொலிவுட்டில் உருவாகியுள்ளது.
பீட்சா காதல் மற்றும் திகில் நிறைந்த திரைப்படமாக கொலிவுட்டில் உருவாகியுள்ளது.
முதன்முறையாக விஜய் சேதுபதியும் குள்ள நரிக்கூட்டம் புகழ் ரம்யா நம்பீசனும் இணைந்துள்ளார்கள்.
இவர்களுடன் ஆடுகளம் நரேன், ஜெய்குமார், சிம்ஹா, கருணா, வீர சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.
பீட்சாவை வீடு வீடாக சென்று கொடுக்கும் நபராக வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய திடீர் திருப்பங்களை திரையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் சங்கம் சினிமாஸ் வெளியிடுகிறது. இப்படத்திற்கான இசை மற்றும் டிரைலர் செப்ரெம்பரில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
பீட்சா படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய லியோ ஜான் பவுல் தொகுத்து வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment