இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தமிழில் நான் நடித்த தாண்டவம் வெளிவரப்போகிறது. இதில் நான் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருப்பது பற்றி கேட்கிறார்கள்.
அனுஷ்கா என்னைவிட ரொம்பவே சீனியர் அவருடன் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். மதராசபட்டினத்தில் ரொம்ப அமைதியான, அடக்கமான பெண்ணாக நடித்தேன்.
இதில் அதற்கு நேர் எதிர்மாறான சுறுசுறுப்பான கதாபாத்திரம். காதல் என்ற பெயரில் விக்ரமை தொந்தரவு செய்வதுதான் என் வேலை.
அடுத்து ஷங்கரின் ஐ படம் எனக்கு முக்கிய திருப்புமுனை படமாக இருக்கும், தெலுங்கு, இந்தியில் நடித்தாலும் என் கவனமும், முக்கியத்துவமும் தமிழின் மீதுதான் இருக்கும். இதற்காகவே தமிழ் கற்று வருகிறேன்.
என்னைப் பற்றி நிறையவே தவறான செய்திகள் வருவது பற்றி எனக்குத் தெரியும்.
ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை என்றும் நான் எனது நடிப்பிலேயே குறியாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment