Monday, 17 September 2012

முத்தக் காட்சிக்காக இந்திப்படத்தை தவிர்த்த த்ரிஷா

திரிஷாவுக்கு முத்தக் காட்சிகளுடன் நிறைய இந்திப்பட வாய்ப்புகள் வருகின்றன.
ஏற்கனவே 2010ல் கட்டா மீட்டா இந்திப் படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார்.
அப்படம் தோல்விடைந்ததையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.
தற்போது சமர், பூலோகம், என்றென்றும் புன்னகை என்று மூன்று தமிழ் படங்கள் கைவசம் உள்ளன.
இதற்கிடையில் இந்தி இயக்குனர்கள் சிலர் த்ரிஷாவை அணுகி தங்கள் படங்களில் நடிக்க அழைத்தனர். இம்ரான் ஹஸ்மி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க அழைத்தனர்.
அவற்றின் கதைகளை கேட்ட த்ரிஷா அதிர்ந்தார். எல்லா படங்களிலும் தனது கதாபாத்திரத்தை மிக கவர்ச்சியாக உருவாக்கியிருந்தனர்.
முத்தக்காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்றார்கள். எனவே அப்படங்களில் நடிக்க திரிஷா மறுத்து விட்டார்.
தெலுங்கு நடிகர் ராணாவும் த்ரிஷாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கிசு கிசுக்கள் பரவி வருகின்றன.
எனவே கவர்ச்சி வேடம் இல்லாத கதைகளை தெரிவு செய்கிறார். இயக்குனர்களிடம் முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று உறுதிபட கூறி விடுகிறாராம்.

No comments:

Post a Comment