சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘மதில் மேல் பூனை’ படத்தில் உள்ள ஒரு காட்சியையும் பத்திரிக்கையாளர்களுக்கு போட்டுக் காட்டினர். மதில் மேல் பூனை படக்குழு படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது ஹீரோயின் விபா பேச ஆரம்பித்தார். பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் உணர்ச்சி பொங்கி பேசிய விபா ‘ஆக்ஷன் காட்சிகளில் விஜய் வசந்த் அட்டகாசம் செய்துள்ளார்.
எதிர்காலத்தில் இவர் சூப்பர் ஸ்டாரா வருவாரு” என ஒரே போடாக போட்டார். பல நடிகர்கள் பல பெயர்களை வைத்துக்கொண்டாலும் ’சூப்பர் ஸ்டார்’ என்ற மணிமகுடம் அவர் ஒருவருக்கே சொந்தமாகிவிட்டது. வசந்த் விஜய் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாராக வருவார் என்று சொல்லி விபா கலக்கிவிட்டதால், படபடப்போடு சட்டென எழுந்து வந்து மைக்கை பிடுங்கிய விஜய் வசந்த் “இவங்க என் மேல இருக்க அன்புல இந்த மாதிரி பேசுறாங்க. என்னைக்குமே அவர் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார். அவர் ரசிகனா இருக்கவே நான் பெருமை படுவேன்” என விளக்கிவிட்டு போய் அமர்ந்துகொண்டார்.
No comments:
Post a Comment