இந்தப் படம் எப்போது தொடங்கும், சிவாதான் இயக்குனரா என்பதெல்லாம் இன்னும் முடிவுக்கே வராத விஷயங்கள். ஆனால் முடிவான ஒரு விஷயம் இருக்கிறது. விஜயா புரொடக்சன் தயாரிப்பில் விஜய் நடிக்கிறார்.
துப்பாக்கியில் நடித்து வரும் விஜய் அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்திருக்கிறார். அடுத்த மாதம் அல்லது அதற்கு அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தயாரிக்கப் போவது விஜயா புரொடக்சன்.
ஓரே நேரத்தில் அஜீத், விஜய் கால்ஷீட்டை கையில் வைத்திருக்கும் இவர்களை முரட்டு பொறாமையுடன் பார்க்கிறார்கள் மற்ற தயாரிப்பாளர்கள். பொறாமைப்படுவதற்கு இதைவிட வேறு காரணம் வேண்டுமா என்ன.
No comments:
Post a Comment