Tuesday, 18 September 2012

அனுஷ்காவால் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ஹன்சிகா

தமிழ்நாட்டில் இவர் தேற மாட்டார் என்று கோடம்பாக்கமே ஓரங்கட்டிய நடிகை தான் ஹன்சிகா.
ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வெற்றி பெற்றதால், அதுவரைக்கும் அவரை சீண்டாமல் இருந்த சில இயக்குனர்கள் உடனடியாக அம்மணிக்கு அட்வான்ஸ் கொடுத்து தங்கள் படங்களுக்கு புக் பண்ணிவிட்டனர்.
ஆக, இப்போது அரை டஜன் படங்களை கைப்பற்றியபடி முன்வரிசை நடிகையாகியிருக்கிறார் ஹன்சிகா.
ஆனால் ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் சிங்கம்-2 படத்தில் முக்கிய நாயகியாக அனுஷ்காவும் இருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா.
காரணம், முதலில் இரண்டு பேருக்குமே முக்கியத்துவம் உள்ளது என்று சொன்னவர்கள், இப்போது அனுஷ்கா தான் முதன்மை நாயகி என்கிறார்களாம்.
இதனால் அதிர்ச்சியில் இருக்கும் ஹன்சிகா, அவசரப்பட்டு இந்த படத்தில் கமிட்டாகி விட்டோமோ என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

No comments:

Post a Comment