Tuesday, 18 September 2012

ஆபிரஹாம் லிங்கனை விட உங்கள் தோல்விகள் குறைவு! இதோ அவரின் தோல்வி லிஸ்ட்!

ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனநாயக முறையின் கலங்கரை விளக்காக விளங்கி அமெரிக்காவில் அடிமை வியாபாரத்தினை ஒழிக்கும் முயற்சியில் தன் உயிரை அர்ப்பணித்தவர். வறுமை காரணமாக பாடசாலை செல்லமுடியாது தந்தையின் தச்சுப்பட்டறையில் துணைபுரிந்தார். பலமைல்கள் தூரம் நடந்து சென்று கடன் வாங்கிப் புத்தகங்களைப் படித்தார். பின்பு சட்டம் பயின்று சாதாரண வழக்கறிஞர் ஆனார்.
தன் வாழ்வில் உயரிய இலட்சியத்தினை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தினை பல்வேறு தோல்விகளைக் கடந்து 1860ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையை அலங்கரித்தவர்.
ஆபிரஹாம் லிங்கன் வெள்ளை மாளிகையை அடைய கடந்துவந்த பாதை…..
Ø 1816 ~ ஆபிரஹாம் லிங்கனின் குடும்பத்தினர் அவர்கள் பாரம்பரியமாக குடியிருந்த வீட்டிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் தன் குடும்பத்திற்கு உதவு புரியுமுகமாக வேலைக்கு செல்ல நேர்ந்தது.
Ø 1818 ~ ஆபிரஹாம் லிங்கனின் தாயார் மரணம்
Ø 1831 ~ வியாபாரத்தில் தோல்வி
Ø 1832 ~ சட்டசபை தேர்தல் தோல்வி
Ø 1832 ~ சட்டக்கல்லூரி செல்வதற்காக தனது தொழிலினை இழந்தார், ஆனாலும் சட்டக்கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை.
Ø 1833 ~ வியாபாரத்தில் தோல்வி
Ø 1834 ~ சட்டசபைத் தேர்தல் தோல்வி
Ø 1835 ~ ஆபிரஹாம் லிங்கன் மணம்முடிக்கவிருந்த அவனது காதலி மரணம்
Ø 1836 ~ நரம்புக் கோளாறு நோய் பாதிப்பினால் 6 மாதங்கள் படுக்கையிலேயே காலத்தினைப் போக்கினார்
Ø 1838 ~ சட்டசபை சபாநாயகர் தேர்தல் தோல்வி
Ø 1840 ~ எலக்டர் தேர்தல் தோல்வி
Ø 1843 ~ காங்கிரஸ் தேர்தல் தோல்வி
Ø 1846 ~ காங்கிரஸ் தேர்தல் வெற்றி; வாசிங்டன் சென்று நல்லதொரு வேலையில் இணைந்துகொண்டார்.
Ø 1848 ~ காங்கிரஸ் மீள் தேர்தல் தோல்வி
Ø 1849 ~ தன் சொந்த மாநிலத்தில் காணி அதிகாரி பதவியில் இணைய விண்ணப்பித்தார்; விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
Ø 1854 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி
Ø 1856 ~ உப ஜனாதிபதி தேர்தல் தோல்வி
Ø 1858 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி
Ø 1860 ~ ஜனாதிபதி தேர்தல் வெற்றி

No comments:

Post a Comment