Tuesday, 18 September 2012

தீபிகா படுகோனின் அப்பாவாக நடிக்கும் சத்யராஜ்

ஷாருக்கான் நடிக்கும் படத்தில் தீபிகா படுகோனுக்கு அப்பாவாக நடிக்க உள்ளார் சத்யராஜ்.
இந்தியில் ‘கோல்மால்’, அப்படத்தின் 2 பாகங்கள், ‘சிங்ஹம்’ (தமிழ் சிங்கம்), ‘போல் பச்சன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரோஹித் ஷெட்டி.
தொடர்ந்து ரூ.100 கோடி வசூல் செய்யும் படங்களை இயக்கியதால் டாப் இயக்குனர்கள் வரிசையில் இருக்கிறார்.
அவர் அடுத்து இயக்கும் இந்தி படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. மும்பையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு புறப்படும் ரயிலில் பயணிக்கும் மும்பைவாசி ஷாருக்கானுக்கும் தமிழ் பெண் தீபிகா படுகோனுக்கும் காதல் பிறக்கிறது.
ராமேஸ்வரம் சென்றதும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை வைத்து நகைச்சுவையுடன் படம் நகர்கிறது. படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்த ரோஹித் ஷெட்டி முடிவு செய்திருக்கிறார்.
இதனால் படத்தில் பெரும்பாலும் தமிழ் நடிகர்களையே நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். கொமெடித்தனம் நிறைந்த டான் வேடம் படத்தில் இடம்பெறுகிறது. அது தீபிகாவின் அப்பா வேடம்.
அந்த வேடத்துக்கு சத்யராஜ் பொருத்தமாக இருப்பார் என்று அவரது நண்பர்கள் சிபாரிசு செய்துள்ளனர்.
இது தொடர்பாக படக்குழு சத்யராஜிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரோஹித் ஷெட்டி கூறுகையில், தமிழை இந்தி பாணியில் பேசும் வடஇந்திய நடிகர்கள் எனக்கு தேவையில்லை.
தமிழ் நடிகர்கள் பலரை இதில் நடிக்க வைக்க விரும்புகிறேன் என்றும் அவர்கள் யார் என்பதை தற்போதைக்கு கூற இயலாது எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment