வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய ரஞ்சித், அட்டக்கத்தி படத்தை இயக்கினார்.
இப்படம் வெற்றிபெற்றதையடுத்து அஜித்துக்கென கதை ஒன்றை உருவாக்கியுள்ளார் ரஞ்சித்.
கதை கேட்ட அஜித் அசந்துபோய் படத்தினை தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
வயதான ஒருவரை மையமாக கொண்ட கதை அம்சம் என்பதால் படத்தில் நாயகனாக அஜித் நடிக்கவில்லையாம்.
மேலும் அஜித் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ராஜ் கிரண் அந்த வயதான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகுமென கொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment