Thursday, 20 September 2012

புதிய படத்தில் ஜோடி சேரும் சிம்பு- நயன்தாரா

பிரிந்த காதல் ஜோடி சிம்பு- நயன்தாரா புதிய படமொன்றில் இணைந்து நடிக்க முடிவு செய்துள்ளனர்.
கொலிவுட்டில் 2006ம் ஆண்டு திரைக்கு வந்த வல்லவன் படத்தில் சிம்பு- நயன்தாரா இணைந்து நடித்தனர்.
இப்படத்தின் மூலமாக இவர்களுக்கு இடையே உருவான நட்பு காதலாக மாறியது.
பின்னர் சில நாட்களில் மன கசப்புகளுக்கு இருவரும் ஆளாகி பிரிந்தனர். இதையடுத்தே நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலித்தனர்.
அந்த காதலும் தற்போது கடலில் மூழ்கியதையடுத்து நயன்தாரா சினிமாவில் நடிக்கத்தொடங்கியுள்ளார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த விருந்து ஒன்றில் சிம்பும் நயன்தாராவும் சந்தித்து மனம் விட்டு பேசிக்கொண்டனர்.
இதைக்கவனித்த தயாரிப்பாளர்கள் சிலர், புதிய படமொன்றில் இவர்கள் இருவரையும் இணைய வைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
அந்த வகையில் ஒஸ்தி படத்தை தயாரித்த மோகன் அப்பாராவ், டி.ரமேஷ் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க சிம்பு- நயன்தாராவிடம் திகதிகள் கேட்டுள்ளனர். இதற்கு இருவரும் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment