இருவரும் ஒருவரை ஒருவர் அகமும் புறமும் அறிந்திருக்க
வேண்டுமென்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி திறந்த புத்தகமாக
இருக்காதீர்கள், அது நன்மையை விட தீமையைத் தான் அதிகம் ஏற்படுத்தும்
என்கிறார்கள் உளவியல் நிபுணணர்கள். தம்பதிகள் காக்கும் தலையாய ரகசியங்களாக
அவர்கள் கூறும் விஷயங்கள்.
பழைய நட்பு, காதல்…
திருமண வாழ்க்கை மீதும், புதிதாக வாழ்வில் இணைந்திருக்கும் கணவர் மீதும் அளவற்ற மரியாதை வைத்திருக்கும் பெண்கள், தங்களின் முந்தைய காதல், நட்பு பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது வேலைக்காகாது. நல்ல ‘மூடில்’ அதை ரசித்துக் கேட்கும் கணவர் கூட, பின்னாளில் பிரச்சனை என்று வரும் போது அதைக் குத்திக் காட்டலாம். மனைவி முன்பு செய்த தவறை ஏன் மீண்டும் செய்யமாட்டாள் என்று கணவன் நினைக்கலாம். கணவன் ‘ஆட்டோ கிராப்’ பாணியில் தனது காதலை விவரித்தால், மறுபடியும் அவர் மலர் தாவ நினைப்பாரோ என்று மனைவிக்குச் சந்தேகம் எழலாம். எனவே இந்த விஷயத்தில் வாயை இறுக மூடிக் கொண்டிருப்பதே நல்லது.
பண விவகாரம்
தம்பதிகளுக்கு இடையே நடைபெறும் 60 சதவீத வாக்குவாதங்கள் பணம் தொடர்பானவையே. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் வங்கி அக்கவுண்ட் விவரங்கள், பின் நம்பர்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை அப்படியே ஒப்பிக்க வேண்டியதில்லை என்கிறார்கள். இது ஒருவர் நிதி விவகாரத்தில் ஒருவர் புகுந்து பிரச்சினை ஏற்படுத்த வழிவகுக்கலாம்;.
கணவன் மனைவியாக இருந்தாலும் அவரவர் தனித்தனியாக செலவழிக்க நினைக்கும் விஷயங்கள் இருக்கலாம். அக்கவுண்ட் நம்பர், பின் நம்பர்களை அறிந்திருப்பதனால், அந்த செலவு பற்றி துணை அறிய நேரும் போது, ‘ஏன் அந்தச் செலவு தேவையா?’ என்ற கேள்வியை எழுப்ப நேரலாம். எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யப் போகிறீர்கள் அல்லது சேமிப்புத் திட்டத்தில் ஈடுபடப் போகிறீர்கள் என்றால் குடும்பத்தில் விவாதித்துக் கொள்வது நல்லது.
நண்பர்களைப் பற்றிய ரகசியங்கள்.
கணவன் – மனைவி தங்களுடன் படித்த, வேலை பார்த்த நண்பர்களைப் பற்றிய மிகவும் ரகசியமான விஷயங்களைப் பேச்சு சுவாரசியத்தில் பரிமாறிக் கொள்ள வேண்டாம். இவ(ர்) சரியான ஓட்டை வாயா இருப்பா(ர்) போலிருக்கிறதே? என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். இருவர் சம்பந்தப் படாத மூன்றாம் நபர் பற்றிய விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். அது நினைத்துப் பார்த்திராத, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும். ’அறியாமல் தவறு செஞ்சீட்டிங்க.. இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்று உங்கள் நண்பர், தோழிக்கு உறுதி அளித்திருந்தால் அது உங்களின் துணையையும் சேர்த்து தான். உங்கள் நண்பரைப் பொறுத்தவரை உங்கள் துணை மூன்றாம் நபர் தான். அவரிடம் உங்கள் நண்பர் பற்றிய ரகசியங்களைப் போட்டுடைப்பது எந்த வகையில் நியாயம்?
குடும்ப விஷயங்கள்.
ஒவ்வொரு குடும்பமும் வெளியே கசியாமல் பாதுகாக்கும் ரகசியங்கள் உண்டு. அவற்றையும், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பற்றிய அந்தரங்க, வெளித் தெரியாத விஷயங்களைப் பட்டியலிட்டு கூற வேண்டுமென்பதில்லை. கணவன் – மனைவிக்கு இடையே வாய்ச் சண்டை ஏற்படும் போது நீ(ங்க) அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவ(ங்க) தானே? என்ற வார்த்தை வந்து, குடும்ப நிம்மதிக்கு ‘குண்டு’ வைத்து விடலாம். தவிர உறவினர் ஒருவரின் நடத்தை, பழக்க வழக்கம் பற்றி துணையிடம் விவரிக்கும் போது அவர், குறிப்பிட்ட உறவினரைச் சந்திக்கும் முன்பே ஒரு முன் முடிவுக்கு வந்து விடுவார். அது நன்மை தராது.
அலுவலக ரகசியங்கள்.
ஒவ்வொரு அலுவலகத்திலும் வெளியே தெரிய விடாமல் காக்க வேண்டிய ரகசியங்கள் என்று எழுதப்படாத விதி உள்ளது. துணையிடம் கூட அதை மீறக் கூடாது. அது நீங்கள் பணி புரியும் அலுவலகத்துக்குக் கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல, அடிப்படை நெறியும் கூட. அலுவலக விஷயம் பற்றி மனைவி ஆவலாகக் கேட்டால் கூட, ‘நீ வெளியே சொல்ல மாட்டாய்(மாட்டீர்கள்). நான் நம்புகிறேன். ஆனால் இதைச் சொல்வது சரியாக இருக்காது.’ என்று மென்மையாகக் கூறலாம். ‘அதையெல்லாம் சொல்லக் கூடாது’ என்று ஆரம்பத்திலேயே வெட்டி விடுவதும் நல்லது தான். ஒரு நிறுவனம் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பது சரியாகாது. சட்டத்துறை, ஊடகத்துறை, மருத்துவத் துறைகளுக்கு இது மிக முக்கியமாகப் பொருந்தும்.

No comments:
Post a Comment