ஆவுஸ்திரேலியாவின் ஐந்து மாகாணங்களில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணம்
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்துக்கு, தேசிய அளவில் அங்கீகாரம்
வழங்க வகை செய்யும் மசோதா, அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல்
செய்யப்பட்டது.
நீண்ட விவாதத்துக்கு பின், இந்த மசோதா, ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
இம்மசோதாவை ஆதரித்து 42 பேரும், எதிர்த்து 98 பேரும் ஓட்டளித்தனர். "ஓரினச்
சேர்க்கை, மிருகங்களின் செயலுக்கு ஒப்பானது´ என, சிலர் பேசியதற்கு, ஓரினச்
சேர்க்கையை ஆதரித்த எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பிரதமர் ஜூலியா கிலார்டு, எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபோட் உள்ளிட்ட
தலைவர்கள், ஓரினச் சேர்க்கை திருமணத்தை எதிர்த்து ஓட்டளித்தனர். இதன் மூலம்
இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment