தமிழில் இப்போது வேட்டை மன்னன், வாலு,
சிங்கம் 2 என பெரிய பட வாய்ப்புகளைக் கையில் வைத்துள்ள ஹன்ஸிகா,
தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் பிரபல நடிகையும்
எம்பியுமான ஜெயப்பிரதா ஒரு தமிழ்ப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில்
அவரது உறவினர் சித்தார்த் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற இஷ்க் என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இதில் நித்யா மேனன் செய்த வேடத்தை ஹன்ஸிகாசெய்கிறார்.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவதாக ஜெயப்ரதா அறிவித்துள்ளார்.
சென்னையில் ஜெயப்ரதாவுக்கு ஏராளமான
சொத்துகள் உள்ளன. ராஜ், ஜெயப்ரதா என இரு திரையரங்குகள் செயல்பட்டு வந்தன.
இப்போது மூடப்பட்டுவிட்டன. விரைவில் அவற்றை மல்டிப்ளெக்ஸ் ஆக்கும்
முயற்சியில் உள்ளனர்.
No comments:
Post a Comment