Wednesday, 19 September 2012

கரீனா ஒரு கசந்து போன திராட்சை… கிண்டலடிக்கும் பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ராவை வாரும் வகையில் கரீனா கபூர் பேசப் போக, அதற்கு கரீனாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் பிரியங்கா.
பிரியங்கா நடித்து வெளியான படம் பேஷன். இந்தப் படத்திற்காக அவருக்கு தேசிய விருதெல்லாம் கூட கிடைத்தது. படத்தை இயக்கியவர் மதுர் பண்டர்கர். தற்போது அதே பண்டர்கர் இயக்கியுள்ள படம் ஹீரோயின். இதில் நாயகியாக நடித்திருப்பவர் கரீனா கபூர்.
இப்படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த கரீனா, பேஷன் படத்தை விட இது சிறப்பாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். இதைக் கேட்டு பிரியங்காவுக்கு டென்ஷனாகி விட்டது. உடனே, கரீனா கபூர் ஒரு கசப்பான திராட்சை என்று கூறியுள்ளர். எதை வைத்து இப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை.
முன்பே கரீனாவுக்கும், பிரியங்காவுக்கும் இடையே முட்டிக் கொண்டது நினைவிருக்கலாம். அதாவது பிரியிங்காவின் பேச்சு உச்சரிப்பை கரீனா கேலி செய்தபோது, அதற்கு பிரியங்கா பதிலடி கொடுக்கையில், கரீனா யாரிடமிருந்து கற்றுக் கொண்டாரோ அவரேதான் எனக்கும் கற்றுக் கொடுத்தார் என்று கரீனாவின் காதலரான சைப் அலிகானை சுட்டிக் காட்டி நக்கலடித்தார். சைபுடன் பிரியங்காவும் ஒரு காலத்தில் பிரியமாக இருந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து கரீனாவின் முன்னாள் காதலரான ஷாஹித் கபூருடன் பிரியங்கா நெருக்கமாகப் பழக ஆரம்பித்தபோதும் கரீனா கடுப்பானார்.
இப்போது இருவருக்கும் இடையே மறுபடியும் முட்டல் மோதல் தொடங்கியுள்ளதால் பாலிவுட்டே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க தயாராகி வருகிறதாம்…

No comments:

Post a Comment