Wednesday, 19 September 2012

தமிழில் வாய்ப்புகள் வரவில்லையா? வேகா கோபம்

பசங்க, சரோஜா, வானம் படங்களில் நடித்தவர் வேகா. அவர் கூறியது: சிட்டகாங் இந்தி படத்தில் நடித்துள்ளேன். விரைவில் திரைக்கு வருகிறது. இதற்கு முன் ஆம்ரஸ் என்ற இந்தி படத்தில் நடித்தேன்.
அப்படம் ஓடவில்லை. இது மனதுக்கு வருத¢தமாக இருந்தது. சிட்டகாங் படத்தில் பெங்காலி பெண்ணாக நடித்துள்ளேன். நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சூர்யா சென் எழுதிய புத்தகத்தை தழுவி படம் எடுக்கப்பட்டுள்ளது.
லதா என்ற நிஜ கேரக்டரில் நடித்துள்ளேன். லதாவின் டைரியிலிருந்து நிறைய குறிப்புகளை இயக்குனர் பெடபிரதா எடுத்துள்ளார். அந்த டைரி முழுவதுமே பெங்காலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை பற்றி இயக்குனர் விளக்கியபோது தெரிந்து கொண்டேன். இப்படம் எனக்கு பெயர் வாங்கித் தரும்.
தமிழில் வானம் படத்துக்கு பிறகு நடிக்கவில்லை. தெலுங்கில் ஹவுஸ்புல் படத்தை இயக்கிய அஜய் புயா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். தமிழில் 3 பட வாய்ப்புகள் வந்தது. நல்ல படங்களில் நடித்த பின், ஏனோ தானோ என படங்களை ஒப்புக்கொண்டு நடிக்க விரும்பவில்லை. அதற்குள் எனக்கு தமிழில் வாய்ப்புகளே வரவில்லை என சிலர் புரளி கிளப்புகிறார்கள். இதில் சிறிதும் உண்மை இல்லை. நான்தான் தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment