மீண்டும் விட்ட இடத்தைப் பிடிக்கும்
முயற்சியில் ஓரளவு வென்றுவிட்ட நடிகர் அவர். வில்லன் பெயரில் தயாராகும்
அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க யார்
யாரையோ பார்த்து பேசி ஒன்றும் சரிவராததால், இந்தியிலிருந்து தமிழுக்கு
வந்து நான்கைந்து படங்களும் நடித்துவிட்ட, சாதிப் பெயரை கூடவே
வைத்திருக்கும் அந்த நாயகியிடம் போனார்களாம்.
கதையைக் கேட்டதும், ‘சூப்பர்.. இப்பவே
டேட்ஸ் ரெடி’ ( என்னவோ கைநிறைய படங்கள் வச்சிருக்கிற மாதிரி…!!) என்றவர்,
சம்பளமாகக் கேட்டது ஒரு கோடி ரூபாய். ஆடிப் போய்விட்டார்களாம். யம்மா
தாயே.. படத்தோட பட்ஜெட்ல அஞ்சுல ஒரு பங்கு உனக்கே போயிட்டா நாங்க என்ன
பண்றது… கொஞ்சம் பாத்து கேளும்மா என்றார்களாம்.
ம்ஹூம்.. கோடில ஒரு பைசா குறைக்க
முடியாது என்று கறாராகக் கூறி அனுப்பி விட்டாராம் நாயகி. விஷயத்தைக் கேட்டு
செ கடுப்பாகிவிட்டாராம் ஹீரோ.
‘பார்க்க ஹீரோவுக்கு அக்கா, சித்தி
மாதிரி இருந்தாலும், அவர் பெயரை வைத்து கொஞ்சம் படத்துக்கு வெயிட்
ஏத்தலாம்னு பாத்தா ஒரேயடியா இப்படிக் கேக்குதே இந்தம்மா.. சரி,
முத்தழகியைப் பார்ப்போமா’ என்று இயக்குநரிடம் தயாரிப்பாளர் கேட்க, ‘அய்யோ
சாமி.. ஆள விடுங்க’ என்றாராம்!
No comments:
Post a Comment