Monday, 3 September 2012

‘லவ் ‘ பன்ன 7 வருஷம் தேவையில்லை ..7 நாள் போதும்:மித்ராவின் புத்துணர்ச்சி

விஜய்யுடன் ஜோடி சேர்ந்த எல்லா நடிகைகளுக்கும் அலங்கார வளைவு வைத்து ஆராதிப்பதுதான் ரசிகர்களின் வழக்கம். இந்த பெருமை சற்றே நொண்டியடிக்கிறது மித்ரா குரியன் விஷயத்தில் மட்டும். ‘காவலன்’ படத்தில் அசின் இருந்தாலும் க்ளைமாக்சில்
விஜய்யுடன் ஜோடி சேர்வது இவர்தான்.
அப்படியிருந்தும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன்தான் அமைந்து கொண்டிருக்கிறது மித்ராவுக்கு.
இந்த முறை நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ்வுடன்இணைந்திருக்கிறார் மித்ரா.
படத்தின் பெயர் ‘நந்தவனம்’. சிவாஜிக்கே பேரன் என்பதால் சற்றே புத்துணர்வு பெற்றிருக்கும் மித்ராவை படத்தின் ரிலீஸ் மேலும் புத்துணர்ச்சியாக்கட்டும்.
இப்படத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறார் டைரக்டர் என்.சி.ஷியாமளன். லவ் பண்ண ஏழு வருஷம் தேவையில்லை. ஜஸ்ட் ஏழு நாள் இருந்தா கூட போதும் என்பதுதான் அது.
எல்லாத்துக்கும் டிப்ளமா கோர்ஸ் வந்துருச்சு. இப்ப லவ்வுக்குமா?

No comments:

Post a Comment