
இப்படம் பற்றி இயக்குனர் வாசு பாஸ்கர் கூறியதாவது:
தமிழ் வாலிபரும், லண்டன் பெண்ணும் இ மெயில் மூலம் நண்பர்களாகின்றனர். அது காதலாகிறது. முகம் பார்க்காத நிலையில் இந்தியாவுக்கு படிக்க வருகிறார் லண்டன் பெண். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தும் அடையாளம் காண முடியவில்லை. விதி அவர்களை கணவன், மனைவியாக்குகிறது. காதலனை மணக்கவில்லையே என்று மனைவியும், காதலியை மணக்கவில்லையே என்று கணவனும் வருந்துகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த காதலர்கள் தாங்கள்தான் என்று தெரிய வரும்போது அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. ஹீரோ அனிரூத். ஹீரோயின் ஜோஷ்னா.
கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ, ஹீரோயின் சோகமாக நடிக்க வேண்டும். ஆனால் ஜோஷ்னாவுக்கு சோக நடிப்பு வரவில்லை. ஹீரோயினை அழைத்து திட்டினேன். இருவருக்கும் ஒரு நாள் முழுவதும் சாப்பாடு கொடுக்கக்கூடாது என்று யூனிட்டில் சொன்னேன். இதனால் கோபித்துக்கொண்டு எதுவுமே சாப்பிடாமல் பட்டினி கிடந்தனர். அந்த தோற்றத்தை அப்படியே காட்சிக்கு பயன்படுத்திக்கொண்டேன். வெகு நாட்களுக்கு பிறகு போலி டாக்டர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். இசை ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு டி.கண்ணன்
No comments:
Post a Comment