சூப்பர் வில்லி என்று சூப்பர் நடிகராலேயே பாராட்டப்பட்ட தங்கமான நடிகையின் திருமண வாழ்க்கையில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாம். இயக்குனர் கணவர் அக்கட பூமியில் இருக்க, நடிகை சென்னையிலேயே தனியாக இருக்கிறாராம்.
குழந்தை பெற்ற பிறடகு வந்துள்ள இந்தப் பிரிவிற்கு சார்மிங்கான நடிகையுடன் இயக்குனர் கணவருக்கு ஏற்பட்டுள்ள உறவுதான் என்கிறார்கள் டோலிவுட்டில்.
மனைவி பிரிந்து சென்றதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் நடிகையுடன் சுற்றிக்கொண்டிருக்கிறாராம் இயக்குனர்.
பல படங்களை ஈயாட வைத்த படத்தின் நாயகன் நட்சத்திர பெயருள்ள நடிகையை ஒரு வருஷமாக காதலித்து வருகிறாராம். ஆனால் இப்போது திடீரென்று ஒரு பெண்ணை ஃபேஸ்புக்கில் பிடித்தவர் அந்தப் பெண்ணையும் காதலித்து காதல் சடுகுடு நடத்தியுள்ளார்.
நடிகையுடன் நாயகனுக்கு உள்ள காதலைத் தெரிந்துகொண்ட புதுப்பெண், புத்திசாலித்தனமாக அவரை முந்திக்கொண்டு நடிகருடன் திருமணத்திற்கு தேதி குறித்துவிட்டாராம். இதனால் நட்சத்திர காதலி புலம்பி வருகிறார்.
No comments:
Post a Comment