Monday, 6 August 2012

ப்ளூஃபிலிம் நடிகைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு


ஜிஸம் 2 படத்தில் பிரபல ப்ளூஃபிலிம் நடிகை சன்னி லியோன் நடித்திருப்பதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை இயக்கியிருக்கும் பூஜா ப‌ட்,நடித்திருக்கும் சன்னி லியோன் இருவரின் உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டன.
ஜிஸம் 2 படத்தில் சன்னி லியோனின் அரை நிர்வாண மற்றும் அரைகுறை ஆடை போஸ்கள் நிரம்பியுள்ளன. இந்த காட்சிகள் நிரம்பிய படத்தின் ட்ரெய்லருக்கு ஏற்கனவே சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியது. இதனால் தொலைக்காட்சியில் படத்தின் ட்ரெய்லரை ஒளிபரப்ப முடியவில்லை. சென்சாரின் இந்த செயலை பூஜா பட் கடுமையாக சாடியிருந்தார். இணையத்தில் ட்ரெய்லர் வெளியானது.
சன்னி லியோனின் அரை நிர்வாண படங்களால் ஜிஸம் 2-க்கு எதிர்பார்த்ததைவிட அதிக விளம்பரம் கிடைத்தது. இதனால் அது போன்ற படங்களை தீவிரமாக பிரமோட் செய்தார் பூஜா பட். இதுவே இப்போது வினையாக அமைந்திருக்கிறது.
ப்ளூ ஃபிலிமில் நடித்திருக்கும் சன்னி லியோனின் ஜிஸம் 2 படத்தை தடை செய்ய வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தப் படத்தின் ஆபாச சுவரொட்டிகளை கிழித்தெறிந்து மும்பையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அஸ்ஸாமில் இருவரின் உருவப் பொம்மையை எரித்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் சென்னையிலும் விரைவில் எதிரொலிக்க உள்ளது. போராட்டத்துக்கு காரணம் தேடிக் கொண்டிருந்த பெண்கள் அமைப்புக்கு இந்த விவகாரம் புது உற்சாகத்தை தந்துள்ளது

No comments:

Post a Comment