
விட்டால் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரை துப்பாக்கியால் சுட்டு விடுவாரோ என நினைக்கும் அளவுக்கு என்றைக்குமே ஸ்ரீதேவி மீது அதீத ப்ரியத்துடன் இருக்கும் டைரக்டர் ராம்கோபால் வர்மா. இப்போது ஸ்ரீதேவியை வைத்து ஒரு காமெடி படம் டைரக்ட் செய்யப் போகிறாராம்.
திருமணத்துக்குப் பிறகு கணவர் போனிகபூரின் புரொடக்ஷன் கம்பெனியின் வேலைகளை பார்த்து வந்த ஸ்ரீதேவி படங்களில் நடிக்காமல் விளப்பரப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு கவுரி ஷிண்டே சொன்ன ஸ்டோரி பிடித்துப் போனதால் ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அதுவும் மும்மொழிகளில் வெளியாகி இப்பவும் விடாமல் இருக்கும் ஸ்ரீதேவியின் ரசிகர்களை சந்தோசப்படுத்தி, தான் இன்னமும் ஸ்டார் தான் என்று நிரூபிக்க வைத்தது.
இப்போது தனது அடுத்த படமாக பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா டைரக்ட் செய்யும் ஒரு புதிய படத்தில் இணைகிறாராம்.
இந்தப் படம் ராம்கோபால் வர்மாவின் திகில்,கடத்தல்,ரத்தம் என்ற தற்போதைய பாணியில் இல்லாமல் 1991 ஆம் ஆண்டு ராம்கோபால் டைரக்ஷனில் ஸ்ரீதேவி வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான Kshana Kshanam தெலுங்கு படம் போல கலகலப்பாக இருக்குமாம்.
'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் ரிலீஸானவுடன் ரசிகர்களோடு ரசிகராய் தியேட்டரில் போய் படம் பார்க்கச் செல்வதை ஒரு வாரமாக உற்சாகமாக டிவிட் பண்ணிக் கொண்டிருந்தார் வர்மா. இப்போது தன் பேவரைட் ஸ்டாருடன் மீண்டும் இணைந்து வேலை பார்க்கும் கனவு பலிப்பதால் குஷியாய் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறாராம் வர்மா.
No comments:
Post a Comment