Tuesday, 2 October 2012

நீர்ப்பறவை படத்துக்கு யு – கண்ணீருடன் பாராட்டிய தணிக்கைக் குழுவினர்!


ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் ‘நீர்ப்பறவை’ படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.
‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தின் மூலம் மூன்று தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வரும் மூன்றாவது படம் இது.
விஷ்ணு, சுனேனா, சரண்யா பொன்வண்ணன், யோகி தேவராஜ் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை குறுந்தகடு மற்றும் திரை முன்னோட்டம் வரும் 10 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் சத்யம் திரையரங்கில் நடக்கிறது.
இயக்குனர் பாலுமகேந்திரா, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் மற்ற திரைக்கலைஞர்களுடன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட இசை குறுந்தகடை ஹாரிஸ் ஜெயராஜ் பெற்றுக் கொள்கிறார்.
இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் பார்த்து, மிக நெகிழ்ந்து, கண்ணீருடன் பாராட்டியதுதான் ஹைலைட்!

No comments:

Post a Comment