Tuesday, 2 October 2012

இடது காலால் பரீட்சை எழுதி புலமைச் சித்தி அடைந்த மாற்றுத் திறன் மாணவி


இடது காலால் பேனாவைப் பிடித்துப் பரீட்சை எழுதி கடந்த தரம் 05 புலமைப் பரிசிலில் திறம்பட சித்தி அடைந்து உள்ளார் மாற்றுத் திறனாளியான சிறுமி ருஷ்மி நிமேஷா குணவர்தன.
இவருக்கு பிறப்பில் இருந்தே கைகளிலும், வலது காலிலும் நிரந்தர ஊனம்.
இவர் தெரணியாகலவில் உள்ள தெலுலுவ கனிஷ்ட பாடசாலை மாணவி.
இவரது பாடசாலையில் இருந்து 13 மாணவர்கள் இம்முறை பரீட்சை எழுதி இருக்கின்றார்கள். இவர் ஒருவர்தான் சித்தி அடைந்து உள்ளார். இவர் பெற்றுக் கொண்ட புள்ளிகள் 153. இப்பாடசாலையின் வரலாற்றில் கடந்த 13 வருடங்களில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்து இருக்கின்ற ஒரே ஒரு மாணவர் இவர்தான்.
இவரது தகப்பன் டி. ஜி. சரத் குணவர்தன. இப்பாடசாலையில்தான் கற்பிக்கின்றார். தாய் தம்மிக்க பொடி மெனிக்கா. இவர் ஒரு சங்கீத ஆசிரியர்.
மகள் புலமைப் பரிசிலில் சித்தி பெற்றமை இவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்து உள்ளது. ஆயினும் பிள்ளையின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படக் கூடிய சவால்களை நினைத்து மனம் உடைந்து போய் உள்ளார்.
இச்சாதனை மாணவிக்கு செயற்கைக் கைகள், கால் பொருத்த மனிதாபிமானிகள் உதவி செய்ய வேண்டும் என்று பாடசாலை அதிபர் சமன் விஜேவர்தன ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்து உள்ளார்.

No comments:

Post a Comment