பவர் ஸ்டார் சீனிவாசன், தமிழ் சினிமாவின் ஒரு பிரபலமான நட்சத்திரமாக தன்னை அடையாளப்
படுத்திக்கொண்டவர். ஆரம்பம் முதலே பவர் ஸ்டார் சீனிவாசன் தனக்கு போட்டி தன் குருநாதர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் மட்டுமே என்றும், அஜித்,விஜய்,சூர்யா போன்ற சின்ன சின்ன ஹீரோக்களுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம், அவர்களெல்லாம் ஒரு போட்டியே இல்லை , சம காலத்தில் ஒரே வயதுடைய (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனார்) ஹீரோக்கள் என்றும் கூறியிருந்தார்.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த அவசர பேட்டியில், என்னதான் அஜித் பில்லா-2 ல நடிச்சிருந்தாலும், பில்லா, பாட்ஷான்னு சொன்னா அது என் குருநாதர் சூப்பர் ஸ்டார் தான், அது வேற யாருக்கும் பொருந்தாது. யார் எப்படி நடிச்சு இருந்தாலும் , என் மானசீகமான குருவாகிய சூப்பர் ஸ்டாரை மிஞ்சமுடியாது, இருந்தாலும் என் சகோதரர் அஜித் நடிச்ச பில்லா 2 அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் (நாகரீகம் கருதி) என்று கூறி விடை பெற்றார்.இதைதான் ஊமை குசும்பு என்று சொல்லுவார்கள்.
No comments:
Post a Comment