கடவுளின் படைப்பை விட மேலான படைப்பை, படைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தீவிர மரபணு விஞ்ஞானி ராமச்சந்திரன்(சச்சின் கடேத்கர்). ஆள் அந்த அளவுக்கு அறிவாளியும் தான். அந்த பரிசோதனையை தன் மனைவியிடமிருந்தே தைரியமாய் ஆரம்பிக்கிறார். ஆனா மேட்டர் லைட்டா ஸிலிப் ஆகி ஒரு சின்ன மிஸ்டேக் ஆகி, ரெட்டை குழந்தைகள் உருவாகிடுது, இடுப்புல மட்டும் ஒரு சின்ன சதையால ஒட்டிக்கிட்டு. அம்புட்டுதானே கட் பண்ணிடலாம்லன்னு நமக்கு கேள்வி வர்றதுகுள்ள அது அவ்ளோ ஈசி இல்ல தம்பி.. ரெண்டு கொழந்தைகளுக்கும் எல்லாமே தனித்தனியா இருந்தாலும், இதயம் மட்டும் ஒண்ணே ஒண்ணுதான்.அதுவும் லெப்ட்ல இருக்க குழந்தைகிட்டதான் இருக்கு. கட் பண்ணா ரைட்ல இருக்க குழந்தை அம்பேல்னு ஒரு நியூசை போடுறாரு டாக்டர். இந்த ஆராய்ச்சி அப்பா சரி பரவால்ல ஒண்ணு போனா என்ன ஒண்ணு இருக்குன்னு ஓக்கே சொல்ல, கத்திரி வைக்கப்போறப்ப அம்மா முழிச்சிட்டு சென்டிமென்டா பேசி காப்பாத்துறாங்க.
அப்புறம் என்ன.. ஒரு பாட்டுல ஏகப்பட்ட சமாச்சாரங்கள் நடந்துடுது. நாம எதிர்பார்த்த மாதிரி ரெண்டு குழந்தைகளும் வேற வேற காரக்டருங்களா வளருதுங்க. ஒண்ணு சுட்டி. ஒண்ணு வெட்டி. ஒருத்தன் பேக்கா சிரிக்க, ஒருத்தன் பொருக்கியா நொறுக்க, இவன் விஜய் ரசிகன், அவன் அஜீத் ரசிகன்னு வளந்து ரெண்டு சூர்யாவா வந்து நிக்குறானுங்க.
அதுக்கெடையில அவங்கப்பா ஆராய்ச்சிக்கு பணம் கிடைக்காம அலையுறார். கம்பெனிகள், அரசாங்கம் எல்லாமே அவரை ஏளனமாய் எட்டி உதைக்க மனிதர் கையை ப்ளேடால் வெட்டிக்கொண்டு பாத்ரூமில் கிடக்கும் அளவுக்கு போய், அதைப்பார்த்த மனைவியின் நகைகள் முத்தூட் பைனான்ஸ்க்கு போக, அவர் தன் ஆராய்ச்சி விசயங்கள வச்சு, ஒரு அட்டகாசமான பால் பவுடரை ரெடி பண்ணி விக்க ஆரம்பிக்கிறார். அதை சாப்பிட்டா குழந்தைங்க அப்புடித்தான் வளர்றாங்க.. அறிவு கண்ணாபின்னான்னு டெவலப் ஆகுது. பாட்டு முடியும் போது பெரிய சக்ஸஸ் ஆகி கம்பெனியின் வெற்றிவிழா பார்ட்டி. இம்புட்டும் படம் ஆரம்பிச்சு ஒரு 15 நிமிசத்துக்குள்ள நடக்குற கதை.
அப்போதான் நம்ம காஜல் அகர்வால் என்ட்ரி ஆகிறாங்க. அப்புறம் கதை காதலாகி, கலீல் ஜிப்ரான் கவிதைகள், பாரதியார் கார்ட்டூன்னு டெவலப் ஆகி, வழக்கமா பொண்ணுங்கள ஈசியா பிக்கப் பண்ணுற ரைட் சூர்யாவுக்கு கிடைக்காம, கொஞ்சம் பழத்தனத்தோட நல்ல புள்ளையா இருக்க லெப்ட் சூர்யாக்கு பிக்கப் ஆக, ஒரு போலிஸ்காரம்மா நீ இவங்கள ஆடித்தள்ளுபடில புடிச்சியா? ஒண்ணு வாங்குனா ஒண்ணு பிரீயா? ஆமா கல்யாணம் கட்டிகிட்டு எப்படி? அவங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கப்ப நீ என்னடா பண்ணுவே? என அவர் மூன்று விரல்களை வைத்து மேலும் கீழும் என மாற்றி மாற்றி வைத்து குழம்பிக்கொண்டிருக்க என கதை ஒரு பக்கம் போனாலும்..
காஜலுக்கு ப்ரண்டா வோல்கான்னு ஒரு வெள்ளைக்கார ரஷ்ய பொண்ணு சூர்யாவோட அப்பா கம்பெனியை சுத்தி சுத்தி வருது, இவங்க ஆராய்ச்சி ரகசியங்களை கண்டுபுடிக்க. அப்பாகிட்ட ட்ரை பண்ண அவர் உசாராகி இவளை விரட்டி விட, இந்த வோல்கா அப்பப்ப பார்ட்டில காஜலோட வந்து வோட்கா குடிச்சு சூர்யா & சூர்யாவ ப்ரெண்டு புடிச்சு.. அவங்க மாடுங்களை வளக்குற பண்ணை வரைக்கும் போய் அந்த மாடுங்களுக்கு என்ன தீவனம் போடுறாங்கண்ணு போட்டால்லாம் புடுச்சிடுது..
என்னடா நம்ம விஞ்ஞானி சாரோட பிஸினெஸ் சீக்ரெட்ட எதிரி கம்பெனிகளுங்கு விக்கிறதுக்கு ட்ரை பண்ணுதுன்னு நினைச்சா அடபோங்கப்பா நான் ரொம்ப நல்ல பொண்ணு.. வெள்ளிக்கிழமை சரக்கடிக்க மாட்டேன். உங்கப்பா பாக்டரில ஏதோ தப்பு நடக்குது.. அத கண்டுபுடிச்சு உங்க நாட்டு குழந்தைகளுக்கு வரப்போற ஆபத்தை காப்பாத்த போறேன்னு ஒரு சூர்யாகிட்ட மட்டும் சொல்லிட்டு, வில்லன்கட்ட மாட்டி மாடிலேந்து தூக்கி வீசப்பட்டு செத்துப்போகுது, அப்பகூட விடாம பென் ட்ரைவ்ல மாட்டர காப்பி பண்ணி அதை முழுங்கிடுது..
அந்த பெண் ட்ரைவ அவ பாடிலேந்து போஸ்ட் மார்ட்டம் பண்றப்ப எடுக்க காஜல் போக, அவ போன் பண்ணான்னு, சூர்யா & சூர்யா போக, ஏற்கனவே வில்லனுங்களும் போக, ரெண்டு சூர்யாவும் சர்கஸ் ஏரியாக்குள்ளாற வில்லன்களோட அட்டகாசமா சண்டை போட்டு, அதுல ஒரு சூர்யாக்கு மண்டையில செம அடி விழ.. ப்ரைன் டெட். ஆமாங்க மூளை செத்துப்போச்சு. இதயம் துடிச்சிட்டு இருக்கு.. அந்த இதையத்தை அப்படியே ரைட்டு சூர்யாக்கு மாத்தி.. இன்டர்வல்லாயிடுது.
இப்ப இந்த ரைட் சூர்யா ஆப்ரேசன் முடிஞ்சு, எந்திரிச்சு, எக்ஸர்சைஸ்லாம் பண்ணி.... காஜலோட ஜாக்கிங்லாம் போக ஆரம்பிக்க.. அவரும் ஒரே மாதிரித்தானே இருக்கான்னு இவருகிட்டயும் ரொமான்ஸாயிடுது..அப்பதான் அப்பாகிட்ட ஏதோ தப்பு இருக்குன்னு சூர்யாக்கு மூளையில பல்பு எரிய, இதுக்கெல்லாம் விளக்கம் அந்த தீவனத்துல இருக்குன்னு தீவனத்தை உற்பத்தி பண்ற நாடான பழைய ரஷ்யாலேந்து உடைஞ்ச ஒரு நாட்டுக்கு காஜலோட போய் குற்றம் நடந்தது என்ன விசாரணையில இறங்க.. பல மேட்டருங்க வெளில வருது.

ஸ்டிராய்டுன்னு பரவலா அறியப்படுற ஊக்க மருந்துதான் பிரச்சினை. அதை வச்சு அந்த நாடு பத்து வருச்சுக்கு முன்னாடி என்ன பண்ணுச்சு, இப்ப அதெல்லாம் எப்படி இந்தியாவுக்கு வருது, அதோட சைட் எப்பெக்ட்ஸ் எவ்வளவு கொடூரம்னு பயமுறுத்திட்டே போய்.. கடைசில கெட்டவர்கள் அழிஞ்சு, அந்த பால் பவுடரை சாப்பிட்ட நம்ம நாட்டு குழந்தைகளுக்கெல்லாம் அந்த ஊர்ல இருக்க ஒரு நல்லவரு குடுத்த பார்முலால தடுப்பு மருந்து செஞ்சு குடுத்து அடுத்த தலைமுறை இந்தியா காப்பாத்தப்படுது. எல்லாம் சுபம்..இருங்க சூர்யாக்கும் காஜலுக்கும் கல்யாணம் ஆகி அவங்களுக்கும் ஒரு ரெட்டை குழந்தை பொறக்க.. இப்ப சுபம்.
படத்துல நிறைய இருக்குங்க.. ரொம்ப ஸ்டைலா இருக்கு எல்லாமே.
கலர் புல்லான லொக்கேசன்ஸ் இருக்கு..
கண்ணாபின்னான்னு அழகாருக்கு காஜல் பொண்ணு. இடுப்புல மடிப்பை ரசிச்சிட்டு இருக்கிற தமிழனுக்கு மடிப்பை விடுங்க ஒரு சின்ன சுருக்கம் கூட இல்லாத சிக்குன்னு இருக்க பொண்ணு இது. லோ கிப்ப இந்த அளவுக்கு யாரும் கட்ட முடியாது. அப்படியிருந்தும் அழகுன்னுதான் தோனுதே தவிர அதைத்தாண்டி கண்ணாபிண்ணானெல்லாம் கற்பனை விரியல பாருங்க அதுதான் ஸ்பெஷாலிட்டி.

பாட்டுக்கு உசர உசரமான மலைங்களை தேடிப்புடிச்சு, உச்சில நிக்க கூட பயப்படுற முனையில நிறுத்தி டான்ஸ்லாம் ஆட வைச்சிருக்காங்க.
கே.வி. ஆனந்த் தன் எல்லாப் படங்களிலையும் ஒரு சோசியல் பிரச்சினையை அல்லது அந்த மாதிரி ஒன்னை முன் வைப்பார்.
இதுல எடுத்துருக்க பிரச்சினை குழந்தைங்களோட பால் பவுடர்ல ஊக்க மருந்து கலப்படம்.
சூர்யாவுக்கு நல்ல தீனி போடுற படம். தன் உடல் பொருள் ஆவி அத்தனையையும் குடுத்துத்தான் உழைச்சிருக்கார் மனுசன். ரெண்டு பேருக்கும் பாடி லாங்வேஜ் வித்தியாசம்.. சின்ன சின்ன மேனரிசங்கள்னு ரவுண்டு கட்டுறார்.

என்ன, இந்த மாதிரி அந்நிய நாட்டுக்கு போய் போராடி நாட்டைக் காப்பாத்துற பொறப்பை விஜயகாந்த், அர்ஜூன்டேர்ந்து சூர்யா பறிச்சிட்டாரோன்னு தோன்ற அளவுக்கு 7ம் அறிவுலயும், இந்தப் படத்துலயும் ரிப்பீட்டு.
ஆனா ரெண்டு காரக்டருங்கதான் ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமே தவிர.. ரெண்டும் நாம பார்த்து புளிச்சுப்போன ஸ்டீரியோடைப் காரக்டருங்க தான்.. அதுனால பெரிசா எதுவும் புதுசா தெரியல. ஆச்சுவலா படத்துல நிறைய காரக்டருங்க அப்படித்தான். நல்லவன், கெட்டவன், கவிதை கேட்டு லவ் பண்ணி வில்லன்கிட்டயே உண்மைய சொல்ற பேக்கு ஹீரோயின்னு சில வார்த்தையில சொல்ல முடிஞ்சுடுற காரக்டரைசேஷன் பலவீனம்.
கே.வி. ஆனந்த தான் ஒரு ஸ்டைலான கமர்சியல் மசாலா கிங்குன்னு அடுத்தடுத்து ப்ரூவ் பண்ணிட்டு வரார். இதுலயும் எல்லாம் மிக்ஸ் பண்ணிட்டார்.
ஆனா என்ன ஒரு அன்னியத்தனம் படம் முழுக்க இருக்கு..
காஜலுக்கும் நல்லபுள்ள லெப்ட் சூர்யாக்கும் வர்ற லவ்வுல ஒரு பீலிங்கும் இல்ல ஒரு மண்ணும் இல்லை. அந்த நல்ல புள்ள சூர்யா சாகுறப்ப கூட நமக்கு மனசுல திக்குன்னு ஒண்ணு வந்து எதாச்சும் பண்ணனுமே.. ம்கூம். நடக்கவே இல்லை. நம்மளை விடுங்க, இந்த காஜல் பொண்ண பாருங்க.. லவ்வர் செத்து, அவன் ஹார்டை எடுத்து இன்னொரு சூர்யாட்ட வைச்சு அவன பாக்குறப்ப எவ்வளவு நெகிழ்ச்சியான தருணம்? அது பாட்டு இன்னிக்கு எத்தன மணிநேரம் கரண்டு கட்டுங்குற மாதிரி சாதாரணமா இந்த சாவுல ஒரு மர்மம் இருக்குன்னு சூர்யாவோட அப்பாகிட்ட ஒப்பிக்குது.
படம் பாக்குறதுங்குறது ஒரு விதமான அனுபவம். நல்ல படங்கள் நம்மள புடுச்சு உள்ள இழுத்துடும். அந்த கதையோட கதாபாத்திரங்களோட நம்மள புடிச்சி இழுத்துட்டு போகும்.
ஆனா இங்க ஒரு இடத்துல கூட அந்த சீன்ல ஒன்றிப்போய் படம் பாக்குறோம்ற ஒரு விசயம் நடக்கவே இல்லை. ரசித்து, பீல் பண்ணி, என்ஜாய் பண்ணி படம் பார்ப்பது டோட்டலி மிஸ் ஆகி ஒரு அழகான பொருட்காட்சியை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் அனுபவமாகவே இருக்கிறது மாற்றான்.

No comments:
Post a Comment