Thursday, 6 September 2012

சரத்குமார், பாவனா இணையும் காவல் தேசம்


கொலிவுட்டில் முதன் முறையாக சரத்குமாருடன் இணைந்து நடிகை பாவனா நடிக்கின்றார்.
இப்படத்தின் மூலமாக நீண்ட நாட்களுக்கு பிறகு பாவனா கொலிவுட்டில் நுழைகின்றார்.
மலையாளத்தில் மெட்ரோ எனும் பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் காவல் தேசம் பெயரில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஆசிகா ராஜா பிலிம்ஸ் ஏ. அலெக்ஸாண்டர் ராஜ்குமார், எஸ்.ஹெச். முகம்மது அஜீம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்திற்கான ஒளிப்பதிவை ஸ்ரீ ஸ்ரீராம் கவனிக்க ஷான் ரகுமான் இசையமைக்கிறார்.
பிறைசூடன் பாடல்கள் எழுத வசனம் சாந்த குமார் எழுதியுள்ளார். விபின் பிரபாகர் இயக்குகின்றார். அநியாயத்தை தட்டிக் கேட்ட இளைஞனை இரண்டு ரவுடிகும்பல் துரத்துகின்றது.
இந்த விடயம் இன்ஸ்பெக்டர் சரத்குமாருக்கு தெரிய வர, ரவுடிகளை அடித்து நொறுக்கி விட்டு அந்த இளைஞனை காப்பாற்றுவதே படத்தின் கதை ஆகும்.

No comments:

Post a Comment