ஒரு மலைக் கிராமத்தில் வசிக்கும் சாதாரண இளைஞன், அவன் முறைப்பெண்ணுடனான காதல், இன்னொரு பெண்ணால் அந்தக் காதலில் வரும் குழப்பங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் மன்னாரு.
உதயனின் இனிய இசை, அகுஅஜ்மலின் ஒளிப்பதிவு என படத்தின் ப்ளஸ் ஏராளம். ஒரு எதார்த்தமான நகைச்சுவைப் படமாக வந்துள்ளது மன்னாரு.
இந்தப் படத்துடன் மோதுகிறது ஸ்ரீகாந்தின் பாகன். இதுவும் நகைச்சுவைப் படம்தான். ஸ்ரீகாந்த் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்ப்பார்க்கும் படம்.
விரைவில் பணக்காரனாகும் ஆசையில் பல குறுக்கு வழிகளை முயற்சிக்கிறார் ஸ்ரீகாந்த். ஆனால் அத்தனையும் தோல்வி அடைய, பணக்காரப் பெண்ணான ஜனனியை மடக்கி, அவர் மூலம் பணக்காரனாகப் பார்க்கிறார். அது நடந்ததா என்பது பாகன் கதை.
படத்தின் நேர்த்தியைப் பார்த்து அதன் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறது வேந்தர் மூவீஸ்.
அமீரின் உதவியாளர் அஸ்லம் இயக்கியுள்ளார்.
No comments:
Post a Comment