Tuesday, 18 September 2012

ரஹ்மான் பாடல்களுக்காக தவம் கிடக்கும் தனுஷ்


ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களைக் கேட்க தவம் கிடப்பதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் முதன்முறையாக தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான்.
ரஹ்மானை வைத்து வந்தே மாதரம், ஜனகனமண ஆல்பங்களைத் தயாரித்த பரத் பாலாதான் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் பார்வதி மேனன் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார். படம் முக்கால்வாசி முடிந்தவிட்ட நிலையில், இறுதிக் கட்டப்படப்பிடிப்பு ஒக்ரோபரில் தொடங்குகிறது.
படத்தின் பாடல்களை அதிவேகத்தில் முடித்துக் கொடுத்துவிட்டாராம் ஓஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான்.
இது பற்றி தனது பிளாகில் எழுதியுள்ள தனுஷ், தேசிய விருது, ஒஸ்கர் விருதுகளைப் பெற்ற ஏ.ஆர் ரஹ்மான் அற்புதமான பாடல்களை இந்தப் படத்துக்குத் தந்திருக்கிறார்.
ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம். அவற்றின் இறுதி வடிவத்தைக் கேட்க தவம் கிடக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மீனவர் வாழ்க்கையை மையப்படுத்தி மரியான் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment