Monday, 17 September 2012

ஓவியாவுடன் சில்லுன்னு ஒரு சந்திப்பு..!

 
சில்லுன்னு ஒரு சந்திப்பு’ படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்தை ஆர்.ரவிலல்லின் இயக்குகிறார். இதில் ‘பஸ்ஸே பஸ்ஸே’ என்று தொடங்கும் பாடலை விமல் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் பங்கேற்ற நடிகை ஓவியா கூறியதாவது:-
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இங்குள்ள ரசிகர்கள், நடிகர்-நடிகைகளிடம் மிகுந்த அன்பு காட்டுகிறார்கள். ‘Òகலகலப்பு’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்தேன். படத்துக்கு தேவையாக இருந்ததால் அப்படி நடித்தேன். அதை ரசிகர்கள் வரவேற்றார்கள்.
‘கலகலப்பு’ படத்தில் நடித்தபோது எனக்கும் அஞ்சலிக்கும் போட்டி ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன்.
‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ படத்தில் விமலுடன் நடிக்கிறேன். இது அவருடன் நான் நடிக்கும் 3-வது படம். இதில் மாணவி கேரக்டரில் நடிக்கிறேன். தொடர்ந்து ‘மூடர் கூடம்’ என்ற படத்தில் நடிக்க உள்ளேன். மலையாள படங்களில் நடிக்கவும் பேசி வருகிறேன. தமிழில் நிறைய படங்கள் வந்தால் சென்னையில் வீடு பார்த்து குடியேறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment