Monday, 17 September 2012

மாற்றான், விஸ்வரூபம், சிவாஜி 3 டி… ஆண்டிறுதில் வெளியாகும் பிரமாண்ட படங்கள்!

2012-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடியப் போகிறது. கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் வெளியாகிவிட்டன.
ஆனால் பிரமாண்ட தயாரிப்புகள் இனிமேல்தான் வரவிருக்கின்றன.
விக்ரம் நடித்துள்ள தாண்டவம் இம்மாத இறுதியிலும், சூர்யா நடித்ததிலேயே அதிக பட்ஜெட் படமான மாற்றான் வரும் அக்டோபர் 12-ம் தேதியும் வெளியாகின்றன.
அடுத்து தீபாவளி ஸ்பெஷல்கள். விஜய் நடித்த துப்பாக்கி, கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் இரண்டும் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.
தீபாவளி முடிந்த பிறகுதான் கமலின் விஸ்வரூபம் என்கிறார்கள். ஆனால் ஏனோ கமல் அசாதாரண மவுனம் காத்து வருகிறார் இந்தப் படம் குறித்து. டிசம்பரில் ரஜினியின் “சிவாஜி 3-டி’ ரிலீஸ் ஆகப் போகிறதாம். மறுவெளியீட்டிலும் பெரிய பிரமாண்டம் காட்டுகிறது இந்தப் படம். கிட்டத்தட்ட ரூ 17 கோடி வரை செலவு செய்திருக்கிறார்களாம். 40 கலைஞர்களின் உழைப்பு இது.
இந்தப் படத்தின் பிரிமியர் சமீபத்தில்தான் ஜப்பானில் நடந்தது.
“தீபாவளி, பொங்கல் உள்பட 5 விசேஷ தினங்களில்தான் பெரிய ஹீரோக்கள் படம் வெளியாக வேண்டும் என்று முன்பு சட்டம் போட்டது எஸ்ஏ சந்திரசேகரன் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். இப்போது அவர்களே அந்த சட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதனால் நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்கள் வெளியாவதற்கான சரியான கேப் கிடைக்காமல் நெருக்கடியில் உள்ளன.

No comments:

Post a Comment