Wednesday, 12 September 2012

தமன்னாவை பாராட்டித் தள்ளிய ஹிருத்திக் ரோஷன்


நடிகை தமன்னாவை பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பாராட்டி தள்ளியிருக்கிறார்.
கொலிட்டில் முன்னணி நடிகையான தமன்னா இந்தியில் அஜய் தேவ்கானின் ஜோடியாக ஹிம்மாத்வாலா என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு தி பியூட்டிபுல் என்று தமன்னாவின் படத்தை மட்டும் போட்டு போஸ்டரடித்து விளம்பரம் எல்லாம் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.
இந்திப்பட கனவு பலித்துள்ள சந்தோஷத்தில் இருக்கும் தமன்னாவை மேலும் சந்தோஷப்படுத்தும் வகையில், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் பேட்டி அமைந்துள்ளது.
இந்தித் திரையுலகின் நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் ஹிருத்திக் ரோஷன், தமன்னாவின் நடனத்தை பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னுடன் நடித்த பல நடிகைகளைவிட தமன்னாவின் நடனம் சிறப்பாக இருக்கிறது என்றும் எல்லோராலும் தமன்னா அளவுக்கு ஆட முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதனால் நடிகை தமன்னா ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார்.

No comments:

Post a Comment