இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்ரீதேவியை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
திரையுலகில் 1980 களில் ரஜினிகாந்துடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி.
பின்னர் பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி போனிகபூரை திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கைக்கு பின்னர் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
தற்போது கௌரி இயக்கத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப்பின்னர் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்தார். அதில் ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளார்.
என்னுடைய நடிப்பை பார்த்த ரஜினி என்னை புகழ்ந்தார் என்று ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இப்படத்தில் ரஜினியை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதும் பின்னர் அஜித் கௌரவ வேடத்தில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment