வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் நடிக்க மறுத்தேனா என்பதற்கு பதில் அளித்துள்ளார் அனுஷ்கா.
வெங்கட் பிரபு இயக்கும் படம் பிரியாணி. இப்படத்தில் நாயகனாக கார்த்தியும், நாயகியாக ரிச்சாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
வெங்கட் பிரபு இயக்கும் படம் பிரியாணி. இப்படத்தில் நாயகனாக கார்த்தியும், நாயகியாக ரிச்சாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ரிச்சாவுக்கு முன்பாக இதில் அனுஷ்கா நடிக்க பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அனுஷ்காவிடம் வெங்கட்பிரபு கால்ஷீட் கேட்டதாகவும், ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இது பற்றி அனுஷ்கா தரப்பில், வெங்கட்பிரபு படத்துக்கு அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்டு யாரும் அணுகவில்லை. ஆனால் புதிய திரைக்கதைகள் சிலவற்றை அனுஷ்கா கேட்டு வருகிறார். அது பிடித்தால் நடிப்பார்.
மேலும் கொலிவுட்டில் அனுஷ்கா தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கார்த்தியுடன் நடித்து வந்த அலெக்ஸ்பாண்டியன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.
செல்வராகவன் இயக்கிய படத்தின் பெரும்பகுதியையும் முடித்து கொடுத்து விட்டார். விக்ரமுடன் நடித்துள்ள தாண்டவம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
அடுத்து சூர்யாவுடன் சிங்கம் 2 படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment