திருமணத்திற்கு பிறகு தனது டாக்டர் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலான பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் அண்மையில் தான் மும்பையில் வந்து குடும்பத்தோடு செட்டில் ஆனார். இதையடுத்து அவர் பல்வேறு விளம்பரப் படங்களில் வருகிறார். இது தவிர அவர் கலர்ஸ் டிவியில் வரும் ஜலக் திக் லா ஜா என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அவர் தவிர பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் மற்றும் நடன இயக்குனர் ரெமோ டிசோசா ஆகியோரும் நடுவர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இருவ 9 மணி முதல் 10 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிப்பரப்பாகிறது. இந்த சீசனில் தான் மாதுரி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவர் ஒரு எபிசோடிற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறாராம். கோடி கொடுத்தாலும் சரி மாதுரி தான் வேண்டும் என்று நினைக்கின்றனர் நிகழ்ச்சியாளர்கள்.
மாதுரிக்கு 43 வயதாகியும், 2 ஆண் குழந்தைகளை பெற்ற பிறகும் மெருகுடன் தான் இருக்கிறார். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதை அவர் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்
No comments:
Post a Comment