Saturday, 8 September 2012

தில்லு முல்லு ரீமேக்கில் பவர் ஸ்டார்


கே. பாலசந்தர் இயக்கத்தில் 1981ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தில்லு முல்லு.
தற்போது தில்லு முல்லு ரீமேக் செய்யப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்த கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், மாதவி வேடத்தில் இஷா தல்வாரும் நடிக்கின்றனர்.
மேலும் தேங்காய் சீனிவாசன் கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜூம், சவுகார் ஜானகி கதாப்பாத்திரத்தில் கோவை சரளாவும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்நிலையில் நாகேஷ் நடித்த வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருக்கிறார்.
முந்தைய தில்லு முல்லு படத்தில் நாகேஷ் முக்கிய வேடம் ஏற்றிருப்பார். இவரின் வழிகாட்டுதலின் பேரில்தான் ரஜினிகாந்த் அத்தனை தில்லு முல்லையும் செய்வார்.
தற்போது இவ்வேடத்தை பவர்ஸ்டார் ஏற்றிருப்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தி வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் தில்லு முல்லு ரீமேக்கை வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இயக்குகிறார்.
இப்படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து முதன் முறையாக இசையமைக்கின்றனர்.

No comments:

Post a Comment