தமிழ் சினிமா வரலாற்றில் பணத்தை தண்ணீராய் செலவு செய்து 50 வயதைக் கடந்தாலும் நான்தான் நாயகனாக நடிப்பேன் என்ற கொள்கையோடு மிக குறுகிய காலத்தில் பிரபலமானவர் மருத்துவர் சீனிவாசன்.அவரது இந்தப் பெயரே பலருக்கும் தெரியாது.பவர் ஸ்டார் என்றாலே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு திரைத்துறையில் புகழ் பெற்ற நடிகர் இவர்.
அது மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களான யூடூப், டுவிட்டர், பேஸ்புக், கூகுள்+ என அனைத்திலும் தினமும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.அவர் நடித்த லத்திக படம் 200 நாட்களைக் கடந்து சாதனை புரிந்தது. தொடர்ந்து நான்கு படங்களில் பல மாறுபட்ட வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது ரசிகர்கள் அவரது நடிப்பைக் காண ஆவலோடு இருக்கிறார்கள்.
அசுர வேகத்தில் வளர்ந்து வந்த இவர் சந்தானத்தோடு சேர்ந்து இன்னொரு நாயகனாக ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் உலக இயக்குனரான ஷங்கர் இயக்கும் படமான ‘ஐ’ என்ற படத்தில் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இதற்கிடையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் என்பவர் சீனிவாசன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு சீனிவாசன் 10 கோடி கடன் தருவதாகக் கூறி, சொத்து ஆவணங்களையும், ஆவண சரிபார்ப்பு மற்றும் இதர பணிகளுக்காக ரூ.65 லட்சமும் கேட்டார். அனைத்தையும் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு கடன் வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை என கூறியுள்ளார்.
எனவே, சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீசார் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் மேலும் 2 வடமாநிலத்தவர்களிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் இயக்குனர் ஷ்ங்கர் இயக்கும் ‘ஐ’ படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. படத்தில் உலகத்தரம் வாய்ந்த கதாபாத்திரம் ஏற்று பவர் ஸ்டார் நடிப்பதால் இவர் இல்லாமல் அடுத்தக் கட்ட சூட்டிங்கை நடத்த முடியாத சூழல் நிலவும் எனத் தெரிகிறது.
எப்படியோ விரைவில் வெளிவந்து ‘ஐ’ படத்தில் நடித்து படத்தை வெற்றிப்படமாக்குமாறு அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்களாம்.
No comments:
Post a Comment