திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு கடந்தாண்டு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு கடந்தாண்டு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வரும் போது, “புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு” என்ற வாசகத்தை கட்டாயம் காட்ட வேண்டும்.
தணிக்கை சான்றிதழ் பெறும் போதும் யு சான்றிதழ் வழங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
படத்தில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி தங்கள் குரலிலேயே, சிகரெட் பிடிப்பது உடல் நலனுக்கு கேடு என்பதை வசனம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சிகரெட் பிடிக்கும் காட்சிகள் படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை உடனே எடுத்துச் சொல்லும் என்பதால் அது முக்கிய தேவையாகிறது. எனவே இதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்று கடந்தாண்டு விதிக்கப்பட்ட கடுமையான உத்தரவுகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்பது உடனடியாக தெரியவில்லை.
எனினும், இந்த தளர்வு வரும் அக்டோபர் மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.
இதுகுறித்து புகை பழக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மருத்துவர் பங்கச் சவுத்ரி கூறுகையில், திரைப்படங்களில் புகை பிடிப்பது தொடர்பாக கடந்தாண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி இருப்பது சரியல்ல.
படத்துக்கு தணிக்கை சான்று வழங்குவது உட்பட பல்வேறு விதிகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இது ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்தும் என்றார்.
ஆனால் அரசின் கட்டுப்பாடு தளர்வை திரையுலகினர் வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment