பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஞாயிறு(2ம் திகதி) இரவு மும்பை வந்தார்.
எப்போதும் விமான நிலையம் வந்ததும் ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு பேட்டியளித்த பின்பே காரில் ஏறிச் செல்வார்.
இந்நிலையில் ஞாயிறு அன்று ஊடகத்தினர், ரசிகர்கள் ப்ரீத்தியை காண கூடியிருந்தனர்.
ஆனால் விமான நிலையம் வந்த அவர், தன் கையால் முகத்தை மூடிய படியே காரில் ஏறினார்.
இருப்பினும் சில புகைப்படக்காரர்கள் சுட்டுத்தள்ளியதில் ப்ரீத்தி தாடையில் காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம்.
இந்த காயம் படப்பிடிப்பில் ஏற்பட்டதா அல்லது வேறெதுவும் விவகாரமா என பாலிவுட்டில் புயல் உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment