கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் டிரைலர் 1ம் திகதி வெளியானது.
இப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழாவில் டிரைலரும் வெளியிடப்பட்டது.
ஜீவா, சமந்தா முதன் முறையாக இணைந்திருக்கும் இப்படத்தின் இசையை இளையராஜா அமைத்திருக்கிறார்.
எனவே படத்தின் பாடல்களுக்கு தனி மதிப்பு கிடைத்திருக்கிறது.
இப்படத்தை கௌதமின் போட்டான் கதாஸ் நிறுவனத்துடன் இணைந்து எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.
படத்தின் சூர்யா கௌரவ வேடத்தில் வருகின்றார். கௌதமின் படம் ஆக்ஷன் காதல் கலந்து இருக்கும்.
ஆனால் நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கான டிரைலரை பார்த்தால் முழு நீள காதல் சித்தரம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment