பூவோடு சேர்ந்த காம்புக்கும் ஃபுல்
அழகிருக்கும் அல்லவா? அதுதான் இந்த விசேஷட்ரிப்பிலும் நடந்திருக்கிறது.
‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த ஒரே காரணத்துக்காக இவரை
டோக்கியோவுக்கு அழைத்தார்களாம் அங்குள்ள ரஜினி ரசிகர்கள். இந்த அழைப்பை
சந்தோஷமாக ஏற்றுக் கொண்ட ஸ்ரே, பெட்டி சட்டிகளை எடுத்துக் கொண்டு
கிளம்பிவிட்டார்.
போன இடத்தில் தடபுடலான வரவேற்பும்
கிடைத்திருக்கிறது. அங்குள்ள பாரம்பரிய முறைப்படி இவருக்கு வரவேற்பளித்த
ஜப்பானியர்கள், ரெட் கார்ப்பெட் பாதையில் ரிக்ஷாவில் ஏற்றி அழைத்துச்
சென்றார்களாம். (தலைவரு எங்க ஊர்ல ரிக்ஷாவையே ஒழிச்சிட்டாரு தெரியுமா
ஜேப்பனீஸ்.
இந்த அழைப்பு மட்டுமில்ல. சிவாஜி 3டி
படமா உருவாகுறதுல எனக்கு இன்னொரு சந்தோஷமும் இருக்கு. நான் நடிச்ச முதல்
3டி படம் இதுதான். படத்தை ரஜினி சார் பார்த்துட்டாரு. ஆனால் நான் இன்னும்
பார்க்கல என்று அலுத்துக் கொண்ட ஸ்ரேயா, ரெண்டு பாடல்களை மட்டும் ஜப்பானில்
பார்த்து ரசித்தாராம்.
சிட்டுக்குருவி நாளைக்குதான் திரும்புது டோக்கியோவிலிருந்து
No comments:
Post a Comment