கொலிவுட்டை விட பாலிவுட் போட்டிகள் நிறைந்தது. இருப்பினும் கொலிவுட்டிலிருந்து சென்ற ஸ்ரீதேவி, அசின் போன்றவர்கள் இன்று பாலிவுட்டில் வெற்றிக்கொடி நட்டியுள்ளார்கள்.
இந்த வகையில் தமன்னாவின் வெற்றிக் கொடியும் பாலிவுட்டில் பறக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பாலிவுட்டில் தமன்னா நடிக்கும் தி ப்யூடிபுல் என்ற படத்திற்கான First Look சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சமீபத்தில் சென்னை வந்த தமன்னா, தனுஷின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
வேங்கை படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்ததிலிருந்து எங்களுக்குள்ளே நட்பு அலைவரிசை உள்ளதாகவும் தனுஷ் அற்புதமான மனிதர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
No comments:
Post a Comment