Monday, 10 September 2012

தனது 32வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ஜெயம் ரவி


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ஜெயம் ரவி இன்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பிரபல திரைப்பட எடிட்டர் மோகனின் இளைய மகனான ரவி கடந்த 1980 ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.
இவர் 2003ஆம் ஆண்டு தனது சகோதரன் ராஜாவின் இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்தை அடுத்தே, ஜெயம் ரவி என்ற பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரையிலும் 14 படங்களில் நடித்துள்ள ரவி, தற்போது பூலோகம், நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment