டுவிட்டர் இணையதள பக்கத்தில் ரசிகர்களை தொடர்பு கொள்ளும் தனுஷ் ’3′ படத்துக்கு பின்பு கருத்து எதுவும் தெரிவிக்காமல் ஒதுங்கியிருந்தார்.
தற்போது மீண்டும் இணையதளம் மூலம் தொடர்பு கொள்ள தொடங்கியிருக்கிறார்.
அவர் கூறுகையில், பரத்பாலா இயக்கும் ‘மரியான்’, இந்தியில் ஆனந்த் இயக்கும் ‘ராஞ்சா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.
‘மரியான்’ இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் சூப்பர் இசையில் பாடல்கள் பதிவாகி உள்ளன.
விரைவில் ஆடியோ வெளியாகிறது. அவரது இசையில் நடிப்பது இதுதான் முதல் முறை.
தற்போது காசியில் ‘ராஞ்சா’ படப்பிடிப்பில் இருக்கிறேன். சோனம் கபூருடன் நடித்து வருகிறேன். 15 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.
இதுவொரு புது அனுபவம். அன்பாக பழகும் இயக்குனர் ஆனந்தின் திறமைவாய்ந்த குழுவினருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி என்றும் காசியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்து நடிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment