மாற்றான் படத்தை பற்றி பல்வேறு செய்திகள் உலா வந்து படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு கூட்டியுள்ளது. இந்நிலையில் மாற்றான் படம் ரஜனியின் படங்களுக்கு இணையாக விற்றுள்ளதாகவும் , ரஜனிக்கு அடுத்த இடத்தில் சூர்யா உள்ளார் என்று கோடம்பாக்கத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.
சூர்யாவின் மாற்றான் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதில் பல்வேறு வியாபார யுக்திகளை கையாண்டுள்ளது கே.வி. ஆனந்த் குழு. அடுத்த வாரம் முதல் மாற்றான் முன்னோட்டம் , தொலைகாட்சி விளம்பரம் , என்று களைகட்ட போகிறது தமிழகம்.
இந்த படத்தின் சிறப்பு காட்சியை காண பல முன்னணி நட்சத்திரங்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மாற்றான் 1300 திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர். இது “சூப்பர் ஸ்டார்” ரஜனியின் எந்திரன் படத்துக்கு அடுத்த படியாக திரை அரங்குகளில் வெளியாகும் படமாக இருக்கும்.
ஆனால் இன்னும் ஓபனிங்கில் தலைவரையும் தலையையும் முந்த முடியாமல் இருக்கிறார் சூர்யா. மாற்றான் வந்த பின் என்ன நிலவரம் என்று தெரியும்.
No comments:
Post a Comment