Saturday, 8 September 2012

துப்பாக்கி படத்திற்கு வேறு தலைப்பு வைக்க முருகதாஸ் முடிவு


துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி பிரச்சினையில் இருந்து தீர்வு காண துப்பாக்கி என்ற பெயரை மாற்ற முடிவு செய்துள்ளார் முருகதாஸ்.
மேலும் ‘துப்பாக்கி’ படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் துப்பாக்கியில் விஜய் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தினை வாங்கி வெளியிட இருக்கிறது ஜெமினி நிறுவனம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களை விரைவில் இசை வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
இப்படத்தின் தலைப்பு மீதான வழக்கு செப்ரெம்பர் 10ம் திகதி நீதிமன்றத்தில் வர இருக்கிறது.
அன்று வழக்கு முடிவு பெறவில்லை என்றால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு வேறு தலைப்பு வைத்து விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.

No comments:

Post a Comment