வாகை சூடவா, மவுனகுரு படங்களின் வாயிலாக, தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்து விட்ட இனியா, இப்போது தங்கர் பச்சானின் இயக்கத்தில், “அம்மாவின் கைப்பேசியில் நடிக்கிறார். இதுதவிர, “கண்பேசும் வார்த்தைகள் என்ற படத்திலும், நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கரின் உறவினர் பாலாஜி, இப்படத்தை இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு முழுவதையும், சிங்கப்பூரில் நடத்தியுள்ளனர். படப்பிடிப்பு நடந்தபோது, தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்ததாக கருதிய இனியா, பக்கத்தில் இருக்கும் ஷாப்பிங் காம்ப்ளக்சுக்கு சென்றார். வெகு நேரமாகியும், அவரை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, “அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக, தகவல் வந்தது.
“வெளிநாட்டுக்கு அழைத்து வந்து, இப்படி நடிகையைத் தொலைத்து விட்டோமே என, இயக்குனர் பாலாஜி பதற்றமானார். பிறகு தயாரிப்பு நிர்வாகிகள் வலைவீசித் தேடியதில், ஒரு மணிநேரத்துக்குப் பிறகு தொலைந்து போன இனியா கிடைத்தார்.
“அப்படி எங்கதான் போனீங்க என, இயக்குனர் கலவரத்தோடு கேட்க, “ஷாப்பிங் செய்யும் ஜோரில், வழியை மறந்து, வேறெங்கோ போய் விட்டேன் என, கொஞ்சம் கூட, பதற்றப்படாமல் கூறியுள்ளார், இனியா.
No comments:
Post a Comment