மாற்றான் படத்தினை தெலுங்கில் ‘BROTHERS’ என்ற தலைப்பில் வெளியிடவும் திட்டமிட்டுருக்கிறார்கள்.
இதுவரை சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்திற்குமே சூர்யாவுக்கு தெலுங்கில் யாராவது டப்பிங் பேசி இருப்பார்கள்.
ஆனால் ‘மாற்றான்’ படத்திற்காக சூர்யாவே தெலுங்கில் டப்பிங் பேச சம்மதித்துள்ளார்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு தெலுங்கில் கிடைத்து இருக்கும் வரவேற்பிற்குப் பிறகு, கார்த்தி தெலுங்கு கற்று, அதற்குப் பிறகு தன் படங்களுக்கு அவரே தெலுங்கில் டப்பிங் பேசினார்.
கார்த்தியைப் போலவே சூர்யாவும் தெலுங்கு கற்று, அவரே மாற்றான் படத்திற்கு டப்பிங் பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment